2017 ஆண்டின் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9960 பேருக்கு 9A - சித்தி!

2017 ஆண்டின் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

2016 ஆம் ஆண்டு 69.94% ஆக இருந்த உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்களின் வீதம் இம்முறை 73.05% வரையில் 3.11% ஆல் உயர்வடைந்துள்ளது. 

2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிதப் பாடத்தின் சித்தி வீதமும் 4.43% ஆல் அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 

2016 ஆம் ஆண்டு 62.81 ஆக இருந்த கணிதப் பாடத்தின் சித்தி வீதம் இம்முறை 67.24% ஆக அதிகரித்துள்ளது. 

அத்துடன் அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்து 9A எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

2016 ஆண்டு 8224 ஆக இருந்த 9A எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை 9960 ஆக அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.