ஐபிஎல் 2018- இரண்டு பிளே-ஆப் போட்டிகளை புனேயில் நடத்த முடிவு!

ஐபிஎல் 2018 தொடரின் இரண்டு பிளே-ஆப் போட்டிகள் புனேயில் நடைபெறும் என ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு முடிவு
செய்துள்ளது. #IPL2018
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் கடந்த இரண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவில்லை. இதற்குப் பதிலாக குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் வாரியர்ஸ் அணிகள் இடம்பிடித்திருந்தன. கடந்த சீசினில் புனே அணி இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவி 2-வது இடம் பிடித்தது.
இரண்டு ஆண்டு தடை முடிந்து, இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களம் இறங்குகிறது. இதனால் புனே அணி தற்போது இல்லை. புனே அணியின் கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்துள்ளதால், புனேயில் பிளே-ஆப் போட்டிகளை நடத்த வேண்டும் மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் சார்பில் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் புனேயில் எலிமினேட்டர் மற்றும் 2-வது குவாலிபையர் போட்டிகள் நடத்தப்படும். மைதானம் தயாரானால் புனேவிற்கு முன்னுரிமை, ஒருவேளை தயாராகவில்லை என்றால் கொல்கத்தாவிற்கு மாற்றலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK #KK #MI #RR #RCB #SRH #DD #KXIP

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.