போக்­கு­வ­ரத்­துக்­குப் பாதையில்லை- வீட்டுத் திட்டக் குடும்பங்கள் சிரமம்

வவு­னியா மாவட்­டத்­தின் கொல்­லர்­பு­ளி­யங்­கு­ளம், குஞ்­சுக்­கு­ளம் பகு­தி­க­ளில் வழங்­கப்­பட்ட
வீட்­டுத்­திட்­டத்­துக்கு போக்­கு­வ­ரத்­துச் செய்­வ­தற்கு எந்­த­வொரு பாதை­யும் இன்­றித் தவிக்­கும் 40 குடும்­பங்­கள் தொடர்­பில் உரி­ய­வர்­கள் ஆவன செய்ய வேண்­டும் எனக் கோரிக்கை முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் ஏ-–9 வீதி­யின் மேற்­குத்­தி­சை­யில் தொடருந்து பாதை­யி­னை­யும் தாண்­டிய பகு­தி­யில் உள்ள குறித்த கிரா­மங்­க­ளில் பிர­தேச செய­ல­கத்­தின் ஊடாக சுமார் 100 குடும்­பங்­க­ளுக்கு காணி­கள் வழங்­கப்­பட்­டன. காணி­கள் வழங்­கப்­பட்ட குடும்­பங்­க­ளில் அதிக குடும்­பங்­க­ளுக்கு வீட்­டுத் திட்­ட­மும் வழங்­கப்­பட்டு அப்­ப­கு­தி­யில் தற்­போது மக்­கள் குடி­யி­ருப்­ப­தோடு எஞ்­சிய நிலங்­க­ளில் வீடு­களை அமைக்­கும் முயற்­சி­யும் இடம்­பெ­று­கின்­றன.

இருப்­பி­னும் இவ்­வாறு வழங்­கப்­பட்ட குடி­யி­ருப்பு பகு­திக்­கான மாதிரி வரை­ப­டம் உரிய தரப்­புக்­க­ளால் புகை­யி­ரத திணைக்­க­ளத்­தி­டம் கைய­ளிக்­கத் தவ­றி­ய­தன் கார­ண­மாக தொடருந்துப் பாதை­கள் அமைக்­கும் சம­யம் எந்­த­வொரு இடத்­தி­லும் வீதிக்­க­டவை அமைக்­கப்­ப­ட­வில்லை. இதன் கார­ண­மாக இப் பகு­தி­யில் வசிக்­கும் மக்­கள் பல மைல்­கள் சுற்­றுப் பய­ணத்­தின் மூல­மும் கிரா­மத்தைச் சென்­ற­டைய முடி­ய­வில்லை.

தொடருந்துப் பாதை­யினை கால் நடை­யாக கடந்து அதன்­பின்­னர் வீதி­யற்ற பிர­தே­சத்­தில் தனி­யா­ருக்­குச் சொந்­த­மான வயல் நிலங்­க­ளின் ஊடா­க பய­ணிக்­கும் நில­மையே தற்­போ­து­வரை உள்­ளது. கோடை­கா­லத்­தில் கால்­ந­டை­யா­க­வே­னும் பய­ணிக்­கும் நிலை­யில் மழை காலத்­தில் இது ஓர் அபா­ய­க­ர­மான போக்­கு­வ­ரத்­தா­கவே காணப்­ப­டு­கின்றது எனவும் சுட்­டிக்­காட்­டு­ கின்­ற­னர்.

இப் பகு­தி­யில் காணப்­ப­டும் நிலங்­க­ளில் தற்­போது அமைக்­கப்­ப­டும் வீடு­க­ ளுக்­காக புகை­யி­ர­தப் பாதை வரை உழவு இயந்­தி­ரங்­க­ளில் கொண்­டு­வந்து கொட்­டப்­ப­டும் கல், மண் என்­பவை கட­கங்­க­ளில் சுமார் 400 மீற்­றர்­வ­ரை­யில் காவிச் சென்றே குடி­யி­ ருப்­புக்­களை அமைக்­கும் துர்ப்­பாக்­கி­யம் காணப்­ப­டு­கின்­றது. எனவே அதி­கா­ரி­க­ளின் அச­மந்­தப் போக்­கால் ஏற்­பட்ட இந்த அவ­லத்தை உடன் நிவர்த்தி செய்து தரு­மாறு கோரிக்கை விடுக்­கின்­ற­னர். இவ்­வாறு வீதிக் கடவை அமைக்­காது பாதை அமைந்­தமை தொடர்­பில் புகை­யி­ரத திணைக்­கள அதி­காரி ஒரு­வ­ரி­டம் தொடர்பு கொண்டு கேட்­ட­போது,

‘இந்தப்­ப­கு­தி­யில் புகை­யி­ர­தப் பாதை அமைக்­கும் சம­யம் எந்த இடங்­க­ளில் வீதிக் கடவை அமைக்க வேண்­டும் என சுட்­டிக்­காட்­டு­மாறு பிர­தேச சபை­யினை எழுத்­தில் கோரி­யி­ருந்­தோம். இருப்­பி­னும் பிர­தேச சபை­யால் அவ்­வாறு இப் பிர­தே­சத்­தில் குடி­யி­ருப்­பு வீதி அமை­வது தொடர்­பில் சுட்­டிக்­காட்­டப்­ப­ட­ வில்லை’ என்று தெரி­வித்­த­னர்.

‘குறித்த விட­யம் தொடர்­பில் தற்­போது ஆரா­யப்­பட்டு நேரில் பார்­வை­யி­டப்­பட்­டுள்­ளது. பிர­தேச செய­லரின் சிபார்­சு­டன் உட­ன­டி­யாக அமைக்­க­வேண்­டிய பாதை­கள் தொடர்­பில் புகை­யி­ரத திணைக்­க­ளத்­து­டன் தொடர்­பு­கொண்டு அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்’ என பிர­தேச சபை­யின் செய­லர் தெரி­வித்­தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.