ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து மகளிர் அணி!

இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் மும்பையில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹீலி, மூனி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அந்த அணியினர் அதிரடியாக ஆடியதால் விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.
ஆஸ்திரேலியாவின் ராச்செல் ஹெயின்ஸ் 45 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரியுடன் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் யாரும் பொறுப்பாக விளையாடவில்லை. இறுதியில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஜென்னி கன் 3 விக்கெட்டும், நடாலி சீவர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் விரைவில் அவுட்டாகினர். அவர்களை தொடர்ந்து இறங்கிய டாமி பீமாண்ட் மற்றும் நடாலி சீவர் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.