கதிர்காமத்தை சிங்கள பௌத்தமயமாக்க நடந்த முயற்சிகள்?

கதிர்காமக் கந்தன் கோயில் வழிபாட்டு முறையையும் அதன் நிலபுலன்களையும் சிங்கள பௌத்தமயமாக்கப் பட்டது எப்படி?

“ஜனாதிபதி ஜயவர்த்தனா தலையிட்டு ஆதரவு கிடைத்தது. 1978-ம் ஆண்டு ஜனவரி 29-ம் திகதி வெளிவந்த ‘சிலோன் ஒப்சேவர்’ ஞாயிறு இதழில் ‘முதல் நடவடிக்கை’ என்ற தலைப்புடன் பிரசுரிக்கப்பட்ட செய்தி பின்வருமாறு :

“பெப்ரவரி 4-ம் திகதியன்று சுபமுகூர்த்தமான காலை 8-58 மணிக்கு விசுவாசப்பிரமாணம் செய்யும் ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் முதலாவது உத்தியோகபூர்வமான நடவடிக்கை, கதிரகமவிலுள்ள வேதிகித்திகந்த என்னும் புனித பகுதியை மகாசங்கத்திற்கு தானம் செய்யும் பட்டயமான ஸ்ரீ சன்னாஸ் பத்திரத்தில் கைச்சாத்திடுவதேயாகும்.

அப்பத்திரத்தின் வாசகம் வருமாறு : “ஸ்ரீ லங்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதியான ஜுனியஸ் ரிச்சார்ட் ஜயவர்த்தனா ஆகிய நான், என தலைமையின் கீழ் உள்ள ஸ்ரீலங்கா குடியரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிசபையின் ஏகோபித்த சம்மதத்திற்கு இணங்க இத்தால் உத்தரவிடுவதாவது, ஊவாமாகாணத்தில் மொனராகல மாவட்டத்திலுள்ள வேதிகித்திகந்த என வழங்கும் 26 ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலப்பரப்பையும் அதனுள் அடங்கிய அசையும் அசையா பொருள்களையும் வேதிகித்தி கந்த விகாரையின் பிரதம மடாதிபதியான வணக்கத்துக்குரிய ரத்மலானே ஸ்ரீ சித்தார்த்த தேரோவுக்கும் அவரின் வாரிசுகளுக்கும் புத்தர் பரிநிர்வாணம் எய்திய 2521-ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் நான்காம் நாளான சனிக்கிழமை தினமாகிய இன்று வேதிகித்திகந்த விகாரையின் நன்மை முன்னேற்றம் கருதியும் பௌத்த சாசனத்தை நிலைநிறுத்தவும் உரிமை வழங்கி கையளித்துள்ளேன்”

இத் தகவல் இங்கு எத்தனை பேருக்கு தெரியும். தமிழர்களின் பொது எதிரி
யார் என்று தீர்மானித்து அதை நோக்கி செயல்படுங்கள். எங்களுக்குள் உள்ள பிரச்சனை களைவதிலே காலத்தை கழித்து விடாதீர்கள்

தொடரும் ...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.