தனியாக ஆட்சி அமைக்க ஐ.தே.க. தலைமை வகுக்கும் புதிய வியூகம்!


பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப்பிரேரணைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கினால் வாக்கெடுப்பின் பின் தனித்து ஆட்சி அமைப்பதற்கான நகர்வொன்றை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொள்ளவுள்ளதாகத் தெரியவருகின்றது.

 வாக்கெடுப்பு முடிந்த கையோடு தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைத் திரட்டும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கும் என்றும் இது தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்தும் என்றும் அந்தக்கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 அவ்வாறு தனி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் சுதந்திரக் கட்சியில் இருந்தும் மஹிந்தவின் அணியில் இருந்தும் பலர் இணைவதற்குத் தயாராக இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பிரதமருக்கு எதிரான இந்த நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கத் திட்டமிட்டிருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுள் அதிகமானவர்கள் அப்போது ஐக்கிய தேசிய கட்சி பக்கம் தாவுவர் என்று தெரிவித்துள்ள ஐ.தே.க வட்டாரம், தனித்து ஆட்சி அமைப்பதற்குத் தேவையான ஆகக்குறைந்த 113 என்ற எண்ணிக்கையை விஞ்சும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறியுள்ளது.

 இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் முடிவை எடுக்குமாறு மஹிந்த அணி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. அந்த அழுத்தத்தை ஏற்று ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான தீர்மானத்தை எடுத்தால் அதை தனித்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பாக ஐக்கிய தேசிய கட்சி பயன்படுத்தும் என்று ஊகிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.