கடலுக்கடியில் ஐரோப்பாவின் முதல் உணவகம் அமைக்க நோர்வே திட்டம்!

கடற்கரை உணவங்கள் என்றாலே பொதுவாக அனைவருக்கும் பிடித்த ஒன்றறாகும். இந்நிலையில், நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த உணவகம் தெற்கு நார்வேயின் லிண்டெஸ்னெஸ் பகுதியில் அமைய உள்ளது. நார்வேயின் பிரபல கட்டிடக்கலை நிறுவனமான ஸ்னோஹிட்டா இந்த பணியை மேற்கொள்ள உள்ளது.
 
கடலுக்கு அடியில் 5 மீட்டர் ஆழத்தில் இந்த உணவகம் அமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இந்த உணவகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இதில் ஒரே நேரத்தில் சுமார் 100 பேர் வரை அமர்ந்து உணவருந்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
image
இந்த உணவகத்தில் கடல் உணவுகளுக்கே முக்கியம் அளிக்கப்படும் என்றும், மதுக்காக தனி இடம் அமைக்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே ஐரோப்பிய கண்டத்தில் கடலுக்கடியில் அமைக்கப்பட உள்ள முதல் உணவகம் ஆகும்.
image
ஏற்கனவே துபாயில் அட்லாண்டிஸ், தீ பால்ம் ஆகிய இரு உணவகங்கள் கடலுக்கடியில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.