சூரிய ஒளியில் பொன்னிறமாக ஜொலிக்கும் லிங்கம்!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருகே உள்ள மேல்பாடி பொன்னையாற்றங்கரையில் ஆயிரம் ஆண்டு பழமையான தபஸ்கிருதம்பாள் சமேத சோமநாத ஈஸ்வரர் கோயில் உள்ளது. ராஜராஜசோழனால் கட்டப்பட்ட இக்கோயிலின் எதிரே, ெதற்குப்பகுதியில் 200 அடி தூரத்தில் தாய் வழிபாட்டனார் ஆரூர் தொஞ்சியதேவனின் கல்லறை உள்ளது. கி.மு.1014ம் ஆண்டு நடந்த போரில் வீரமரணம் அடைந்த இவருக்கு அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல்லறை கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லறை மீது அரிஞ்சிகை ஈஸ்வரர் லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த கோயிலில் உள்ள லிங்க வடிவிலான ஈஸ்வரர் மீது ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 4 நாட்கள் காலை 6.20 மணி முதல் 6.50 மணிவரை சூரிய ஒளி விழுமாம். அப்போது சிவன் பொன்னிறத்தில் காட்சியளிப்பார். அதன்படி இன்று காலை இந்த அரிய நிகழ்வு நடந்தது. அப்போது சிவன் பொன்னிறமாக காட்சியளித்தார். பின்னர் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இதில் மேல்பாடி, வள்ளிமலை, பொன்னை, பள்ளேரி, கீரைசாத்து, சத்திரம்புதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த அரிய நிகழ்வு வரும் மார்ச் 24ம் தேதி வரை நடைபெறும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.