இடமாற்றத்தை அதிகாரிகள் தீர்மானிப்பதை கண்டிக்கின்றோம்!

ஆசிரியர் தொழில் சங்கங்கள் இடமாற்ற சபையில் இருந்தும் ஆசிரியர்களுக்கான பாடசாலைகளை அதிகாரிகள் தீர்மானிக்கின்றதை வன்மையாக கண்டிக்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் அவ்வறிக்கையில்,
“ஆசிரியர் தொழிற் சங்கங்கள் இடமாற்ற சபையில் இருந்தும் ஆசிரியர்களுக்கான பாடசாலைகள் அதிகாரிகளினால் தீர்மானிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆசிரியர்களுக்கான இடமாற்றம் வெளிப்படையாக தீர்மானிக்கப்பட்டுவதில்லை. மாணவர்களின் கல்வி உரிமையும் தரமான கல்விக்கான ஆசிரியர்களின் மனித வளங்களும் கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகளினால் வீண்விரயம் செய்யப்படுகிறது.
சட்ட விதிகளுக்கு முரணான செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்களம் பலதடவை சுட்டிக்காட்டியும் கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகள் உதாசீனப்படுத்தியுள்ளனர்.
ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கடிதங்களுடன் தாமதியாது அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் செயற்திறனாக முன்னேடுக்க வேண்டும்.
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களே இம்மாணத்தின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக உள்ளது.
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களுக்குரிய கடிதங்கள் குறிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படாமை தொடர்பாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பொறுப்புக் கூற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.