ரஷ்ய உளவாளி: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுக்கு தெரேசா வரவேற்பு!

ரஷ்யாவின் முன்னாள் உளவாளி விவகாரம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வழங்கிய ஆதரவைப் பிரித்தானிப் பிரதமர் தெரேசா மே வரவேற்றுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியக் கவுன்ஸிலில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோதே, பிரதமர் இதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

எல்லைகள் தொடர்பான கொள்கைகளை ரஷ்யா மதித்து நடப்பதில்லையெனவும், இது தமக்கு அச்சுறுத்தலாகுமெனவும், அவர் மேலும் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவும் மயக்கமடைந்த நிலையில், பிரித்தானியாவின் Salisbury பகுதியில் இம்மாதம் 4ஆம் திகதி மீட்கப்பட்டனர். இது தொடர்பாகப் பிரித்தானியப் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்த நிலையில், இவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக, பிரித்தானியாவின் மதிபீட்டை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ரஷ்ய உளவாளி விவகாரம் தொடர்பாகக் கவனஞ்செலுத்தியுள்ள ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கல், ‘இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கண்காணித்துக்கொண்டு இருப்பார்களெனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.