ஆலய வளா­கத்­தில் துப்­பு­ர­வுப் பணி­யில் ஈடு­பட்ட மூதாட்டி மயங்கி உயி­ரி­ழப்பு!

ஆலய வளா­கத்­தில் துப்­பு­ர­வுப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த மூதாட்டி மயங்கி வீழ்ந்து உயி­ரிழந்­தார். இந்­தச் சம்­ப­வம்  நாவற்­கு­ளியில் நடந்­துள்­ளது.  நாவற்­குளி ஐய­னார் கோவி­ல­டி­யைச் சேர்ந்த செல்­லத்­துரை தங்­கம்மா ( வயது-–68 ) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

அங்­குள்ள ஆலய வளா­கத்­தில் துப்­ப­ர­வுப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த வேளை­யில் அவர் மயங்­கி­னார். அங்­கி­ருந்து உட­ன­டி­யாக யாழ்.போதனா மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டார். அவ­ரைப் பரி­சோ­தனை செய்த மருத்­து­வர்­கள் மூதாட்டி உயி­ரி­ழந்­ததை உறு­திப்­ப­டுத்­தி­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சாவ­கச்­சேரி பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சாவ­கச்­சேரி நீதி­மன்­றப் பதில் நீதி­வான் ப.குக­னேஸ்­வ­ரன் முன்­னி­லை­யில் அறிக்கை தாக்­கல் செய்­த­னர். அறிக்­கை­யைப் பார்­வை­யிட்ட பதில் நீதி­வான் பிர­தேச திடீர் சாவு விசா­ரணை அதி­காரி சீ.சீ.இளங்­கீ­ரன் மூலம் விசா­ர­ ணை­களை நடத்தி நீதி­மன்­றில் அறிக்கை தாக்­கல் செய்ய வேண்­டும் என்று பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டார்.

யாழ்.போதனா மருத்­த­வ­ம­னை­யில் இறப்பு விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பிர­தேச திடீர் சாவு விசா­ரணை அதி­காரி மருத்­து­வ­மனை சட்ட மருத்­துவ அதி­காரி மூலம் உடற்­கூற்­றுப் பரி­சோ­தனை நடத்தி அறிக்கை தாக்­கல் செய்ய வேண்­டும் என்­றும், உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னை­யின் பின்­னர் சட­லத்தை உற­வி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கு­மா­றும் பொலி­ஸா­ரைப் பணித்­தார் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.