இலங்கையில் சீனாவின் இருப்பு குறித்து ராகுல் காந்தி கவலை!

இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் இருப்பு குறித்து இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கவலை வெளியிட்டுள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை உள்ளிட்ட இந்திய அண்டை நாடுகளிலும் சீனாவின் தலையீடு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பூடானில் தென்மேற்கில் இமயமலையில் அமைந்த குறுகிய பீடபூமியான டோக்லாமில் சீனா இராணுவ உட்கட்டமைப்பை நிறுவியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை, இந்தியா மாத்திரமன்றி மாலைதீவு, மியான்மார் போன்ற அனைத்து எல்லை பகுதிகளிலும் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட முறையிலான வெளிவிவகாரக் கொள்கையினால் இந்தியாவின் அனைத்துலக நம்பகத்தன்மையை குறைத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.