சர்வதேச சமவாய சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்!

வலுகட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து ஆட்களை பாதுகாக்கும் சர்வதேச சமவாய சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார்.

குறித்த சட்டமூலத்தில் கையொப்பமிட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபையில் அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவிப்பு நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய கையொப்பத்தை சபாநாயகர் வைக்ககூடாதென கூட்டு எதிரணி உட்பட பல அமைப்புகளை கோரிக்கை விடுத்திருந்தன. இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே சபாநாயகர் குறித்த சட்டமூலத்தில் கையொப்பமிட்டார்.

வலுகட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து ஆட்களை பாதுகாக்கும் சர்வதேச சமவாய சட்டமூலம் கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.