கண்டி வன்முறை : பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் கைது!

கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசாங்கம் விரைவில் கூட்டு எதிர்க்கட்சியில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கைதுசெய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு   புதன் கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
 இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கூட்டு எதிர் க்கட்சியின் செயற்பாட்டாளராக உள்ள பாராளுமன்ற உறுப்பினரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளார். குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை தற்போது தெரிவிக்க முடியாது.
திகன உள்ளிட்ட நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற இன வன்முறை சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் தொடர்புபட்டுள்ளனர் என்ற பிரசாரம் போலியானது. 
கைது செய்யப்பட்டவர்கள் அளித்துள்ள வாக்கு மூலங்களின் அடிப்படையின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்த விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனூடாக பொலிஸ் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன வன்முறைகளின் பின்னணியில் எந்தவொரு அமைச்சரும் இல்லை. போலியான பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன. சம்பவத்ததுடன் தொடர்புப்பட்ட 205 பேர் கண்டியில் கைது செய்யப்பட்டனர். இதில் 72 பேர் சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 133 பேர் அவரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய பகுதிகளில் இருந்து 109 பேர் இன வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இதில் 74 பேர் சாதாரண சட்டத்தின் கீழும் 33 பேர் அவசரகால சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் மொத்தமாக 314 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 4 முஸ்லிம்களை விடுவித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ பிரசாரம் செய்கின்றார். இது உண்மைக்கு முரணான தகவலாகும். அதேபோன்று பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் தொடர்புபட்டுள்ளதாக நான் கூறினேன். அதனை அவர் நிராகரித்தார். 
மெனிக்ஹின்ன முஸ்லிம் பள்ளிவாசலுக்கு தீ வைத்தமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை கைது செய்தனர். 
அதே போன்று திகன சம்பவத்திலும் அதே கட்சியை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். பல்லேகல பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். இதே போன்று பலர் கைது செய்யப்பட உள்ளனர். இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும்  உள்ளார் என தெரிவித்தார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.