உள்ளூராட்சி நிர்வாகத்தை நடாத்த அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பு வேண்டும்!

வடமாகாணத்தில் சுமூகமான உள்ளூராட்சி நிர்வாகத்தை நடாத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க வேண்டுமென வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாளை மறுதினம் உள்ளூராட்சி சபை நிர்வாகம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (24) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உள்ளூராட்சி நிர்வாகத்தை உள்ளூர் விடயம் என்பதால் அதற்குள் மட்டுப்படுத்திக்கொண்டு, சேவைகளை வழங்கக் கூடிய வகையில் அனைத்து தரப்பினர்களும் செயற்படுவதே இன்றைய தேவையாக இருக்கின்றது. 

வடமாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி நிர்வாகத்தை சுமூகமான நிலையில் கொண்டு நடத்துவதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 

புரிந்துணர்வுகள் இடம்பெற வேண்டும். ஏனைய மாகாணங்களை விட வட மாகாணத்தில் சிறந்த நிர்வாகமாக திகழ வேண்டும். 

அந்தந்த கட்சிகள் தமது தலைவர்களை தெரிவு செய்வதன் மூலமும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலமாகவும், சுமூகமான சூழுலை உருவாக்க வேண்டும். முரண்பட்டுக்கொண்டு உள்ளூராட்சி சபைகளை நிர்வகிக்க முடியாது. 

தனிப்பெரும்பான்மை பெற்ற எந்தக் கட்சியாக இருந்தாலும், முழுமையான ஆதரவை ஏனையோருக்கு வழங்கியும், கலந்துபேசியும், சிக்கலில்லாத நிர்வாகத்தை வடமாகாணத்தில் ஏற்படுத்த வேண்டுமென்று அனைத்துக் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.