20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை தோற்கடிக்க தீ்ர்மானம்!

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தப் பிரேரணையை தோற்கடிப்பதென ஏற்கனவே 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீ்ர்மானித்திருப்பதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பான தனிநபர் பிரேணையை, எதிர்வரும் மே 8ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, முன்வைக்கப் போவதாக ஜேவிபி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன்,
“ இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீவிரமாக முயற்சிக்கும்.
இது அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்பதால், ஜேவிபி கொண்டு வரும் பிரேரணையை தோற்கடிப்பது என்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் பல ஏற்கனவே முடிவு செய்துள்ளன.
நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை முற்றாக இல்லாதொழிப்பதை விட, அதன் ஆபத்தான பிரிவுகளை நீக்குவதே இப்போதுள்ள தேவை ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.