25 உணவகங்களுக்கு சீல்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, நுகர்வுக்கு ஒவ்வாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 1,543 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதகா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் 512 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக, பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரொஹான் தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றிவளைப்பின்போது, ஹோட்டல்கள், பல்பொருள் அங்காடிகள், சில்லறைக் கடைகள், வர்த்தக நிலையங்கள், சுற்றுலா விடுதிகள் உள்ளிட்ட சுமார் 25,600 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது 1,45,60,000 ரூபா பெறுமதியான நுகர்வுக்கு ஒவ்வாத உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு,  25 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின், உள்ளடக்கம், பொதி செய்யப்பட்ட மற்றும் காலாவதித் திகதிகள், விலை, நிறை போன்ற தகவல்கள் பொதிகளில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் நுகர்வோர் பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை கொள்வனவு செய்கையில் குறித்த தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.