இங்கிலாந்து நிறுவனத்திடம் 8.7 கோடி மக்களின் தகவல்கள் !

சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி ஆப் வரை சென்றுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு முன் வரும் 11-ம் தேதி பேஸ்புக் தலைமை செயல் இயக்குனர் மார்க் ஜுக்கர்பக் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள 8.7 கோடி பேரின் தகவல்கள் இங்கிலாந்து நிறுவனத்திடம் பகிரப்பட்டுள்ளது என பேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மூத்த தொழிற்பிரிவு அதிகாரி மைக் ஷ்ரோப்பெர் கூறுகையில், இதுவரை மொத்தமாக 8.7 கோடி மக்களின் தகவல்கள் பகிரப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலும் அமெரிக்க மக்களுடையது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு தான் இந்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.