சுவிஸ் Aargau மாநிலத்தில் தமிழர் இயக்கத்தினால் சுவிஸ் மக்கள் மத்தியில் தமிழினவழிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

 Asyl Netzwerk Aarau, சுவிஸ்சர்லாந்தின் Aargau மாநிலத்தில் புகலிடக் கோரிக்கையாளர் களின் நலன்களைப் பேணி, அவர்கள் சுவிஸ் மற்றும் ஏனைய இன மக்களுடன் சேர்ந்து( Integration) வாழ்வதற்கான பல்வேறுபட்ட ஒருங்கிணைத்தல் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்திச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் அரச சார்பற்ற நிறுவனமாகும்.
இவ் அமைப்பின் சித்திரை மாத ஒன்றுகூடல் நேற்று 07.04.2018 மாலை இடம்பெற்றது. அதன்போது அவ் அமைப்பின் அங்கத்தவரும், தமிழர் இயக்கச் செயற்பாட்டாளருமான செல்வி.சுபாசினி றொபர்ட் அவர்கள் கலந்து கொண்டு இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பு, தற்போதும் கட்டமைக்கப்பட்ட முறையில் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பு, ஈழத்தில் தமிழர் எதிர் நோக்கும் சமகாலப் பிரச்சனைகள் ( வலிந்து காணாமலாக்கப்பட்டோர், அரசியற் கைதிகள், நில ஆக்கிரமிப்பு, இராணுவ மயமாக்கல்.....) தொடர்பாக காணொளி ஆவணப்படங்கள் மூலம் விளக்கமளித்திருந்தார். இவ் ஒன்று கூடலில் சுவிஸ் உட்பட பிற நாட்டினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு , ஐரோப்பிய காலணித்துவத்திற்கு முன்பாக ஈழத் தமிழரின் அரசியற் பின்ணணி தொடங்கி முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வரை பல்வேறு கேள்விகளைத் தொடுத்து ஈழத் தமிழர் பிரச்சனை சார்ந்து தம்மை தெளிவுபடுத்திக் கொண்டனர்.
அத்துடன் தமிழர் இயக்கத்தின் வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டபோது; ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்ட, தமிழர் இயக்கம் உலகத் தமிழரை ஒன்றிணைத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மேற்கொள்ளும் செயற்றிட்டங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
நிறைவில் இவ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமையை நிலை நாட்டுவதில் தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகள் மகிழ்ச்சியளிப்பதாகவும் சுவிஸ் நாட்டில் தமிழர்கள் பல்வேறு சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்கி சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருவது அந் நாட்டினர் மத்தியில் தமிழர் சார்ந்து நன் மதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
காண்பிக்கப்பட்ட காணொளிகள்:
https://www.youtube.com/watch?v=ps4WDXY4n58&sns=em
https://youtu.be/WLShsBXGujo 




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.