மாலைத்தீவு விமான நிலையத்தில் இலங்கையர் கைது!

இலங்கை இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபர் மாலைத்தீவிற்கு போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டில், அந்நாட்டு விமானநிலையில் வைத்து கடந்த 14ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 527 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக மாலைத்தீவு சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த நபரை தொடர்ந்தும் தடுத்து வைத்து மேலதிக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மாலைத்தீவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நைஜீரியாவில் போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக இலங்கையைச் சேர்ந்த 6 பேர் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நாட்டின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.