அ.தி.மு.க-வின் உண்ணாவிரதம் போலியானது !

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை, ஆளுங்கட்சியின் போலியான உண்ணாவிரத போராட்டங்களால் எவ்வித நன்மையும் நடக்கப்
போவதில்லை -கமல்! திருச்சியில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையில் இருந்து ரயிலில் திருச்சிக்கு வந்தார் கமல்ஹாசன். ரயில் நின்று செல்லும் எல்லா ரயில் நிலையங்களிலும் தொண்டர்களை சந்தித்தார் கமல்.
இதை தொடர்ந்து பத்திக்கை நிருபர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்: "எதிர்பதற்கான சூழல் ஏற்பட்டால் செய்யவேண்டியது தான். கொள்கை ரீதியாகவும், செயல் முறைகளை பார்த்தும் நான் எடுத்த முடிவு. அது வரும்போது பார்க்கலாம். கெட்டது தான் நடக்கும் என்று ஏன் யூகிக்க வேண்டும்? அப்படி ஏற்படாமல் இருந்தால் நல்லது. ஏற்பட்டால் நின்று செயல்படாமல் இருந்துவிட முடியுமா" என்று எதிர் கேள்வி எழுப்பினார்.
ரஜினியின் பூர்வீகம் பற்றி ஒருவர் கேட்ட போது, "ஒருவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்று பார்க்கக் கூடாது. அவர் இந்த சமூகத்துக்கு என்ன மாதிரியான கருத்துக்களை அளிக்கிறார் என்று தான் பார்க்க வேண்டும்" எனவும் தெரிவித்திருந்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.