உயிருடன் கரை ஒதுங்கும் கடற்பாம்புகள்!

பொதுவாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டால், ஆமைகள், டால்பின்
மீன்கள், திமிங்கிலம் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் கடற்கரையை நோக்கி தவறுதலாக வந்து விடும். அதனை மீனவர்கள் மீண்டும் கடலில் சென்று விடுவர்.
சில சமயங்களில் படகுகளில் அடிப்பட்டு அவை இறந்த நிலையிலும் கரை ஒதுங்குவது உண்டு. ஆனால் கடல் கரையில் கடல் பாம்புகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதே சற்று அரிது தான். 
இந்நிலையில் மாமல்லபுரம் கடற்க்கரையில் அதிக அளவில் கடல் பாம்புகள் இறந்த நிலையிலும் உயிருடனும் கரை ஒதுங்கி உள்ளதாக கூறுகின்றனர் அந்த பகுதி மீனவ மக்கள். 
இது குறித்து அந்த பகுதி மீனவ மக்கள் கூறுகையில், "கடந்த இரண்டு நாட்களாக உயிருடன் கடற்பாம்புகள் அதிக அளவில் இங்கு கரை ஒதுங்குகின்றது. அது ஏன் என தெரியவில்லை? இதனால் கடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என தெரியவில்லை என்றும் வழக்கத்தை விட தற்போது அலைகள் அதிக அளவில் எழும்புவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.