கூட்டமைப்பிற்குள் பிளவினை ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை!

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிதானந்த அளுத்கமகே, பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமது ஆதரவினை வழங்க தீர்மானித்துள்ளது. ஆனால் தமிழ் கூட்டமைப்பு குறித்த விடயம் தொடர்பில்  ஒருதலைப்பட்சமாகவெ செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.


நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பு தொடர்பில் தெளிவுபடுத்தும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறந்த தீர்மானத்தினை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளார். கட்சிக்குள்  தற்போது தோற்றம் பெற்றுள்ள கருத்தொற்றுமை இன்மையே இதற்கு முக்கிய காரணியாக காணப்படுகின்றது.
 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது சுமந்திரனின் கருத்தாக காணப்படுகின்றது .மறுபுறம் பிரதமருக்கு எதிராக தமது அபிப்பிராயத்தை கட்சி ரீதியாக வெளிப்படுத்த வேண்டும் என்பது கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தாக காணப்படுகின்றது.
கட்சியின் இரு வேறுபட்ட கருத்துக்களினையும் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இரா.சம்பந்தன் நுணுக்கமாக அவதானித்து வருகின்றார். கட்சியின் தலைவர் என்ற வகையில் வாக்கெடுப்பிற்கு சமுகம் தராமல் இருப்பது இவரது கருத்தாக காணப்படுகின்றது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமது அரசியல் நோக்கங்களை காரணம் காட்டாமல் சாதாரண பிரஜைகள் என்ற நிலையில் இருந்து செயற்பட வேண்டும் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள நம்பிக்கையில்லா பிரேரணையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகடைக்காயாக பயன்படுத்தக் கூடாது. எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியின் பெருமைகளை கடந்த கால  அரசாங்கத்தின் ஊடாக எதிர்கட்சி தலைவர் அறிந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.