தகுதியற்ற மருத்துவர் ஒருவர் கராப்பிட்டிய மருத்துவமனையில் பணி!

பிரித்தானிய மருத்துவ சபையின் அனுமதியற்ற மருத்துவர் ஒருவர் கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்வதாகத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கராப்பிட்டிய மருத்துவமனை கிளை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

 கடந்த சில வாரங்களாக அவரால் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அந்த சங்கத்தின் உறுப்பினரான மருத்துவர் மங்கள குணதிலக, மருத்துவமனை வளாகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார் .

 ரிச்சர்ட் பெமின்சன் என்ற குறித்த பிரித்தானிய மருத்துவருக்கு பிரித்தானியாவில் விசேட மருத்துவ நிபுணராக செயற்பட பிரித்தானிய மருத்துவ சபையால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை.

 அவருக்கு பிரித்தானியாவில் சத்திர சிகிக்சை மேற்கொள்ளவோ அல்லது மருத்துவ ஆவணங்களில் கையெழுத்திடவோ அனுமதி இல்லை என்றே பிரித்தானிய மருத்துவ சபையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில், குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த மருத்துவருக்கு சுகாதார அமைச்சு அனுமதியளிப்பதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுவதாக மருத்துவர் மங்கள குணதிலக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.