புலம்பெயர் தேசத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் துயரங்கள்..!

தமிழ் அகதிகளின் நாடுகடத்தல், துஷ்பிரயோகத்திற்கு எதிராக மெல்போர்னில் வாழும் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் குரல் கொடுத்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 25ஆம் திகதி லாவன்யா தவராஜா என்ற பெண்ணே இவ்வாறு தமிழ் அகதி நாடு கடத்தல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் அனுபவிக்கும் நிலை குறித்து லாவன்யா தவராஜா கருத்து வெளியிடுகையில்,
அகதிகளுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் பல மக்கள் உள்ளமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பேரணி பல அகதிகளுக்கு மிகவும் முக்கியம். ஆபத்தான நிலைமையில் உள்ளவர்களுக்கு இந்த பேரணி அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது.
முகாம்களிலும் சித்திரவதை அனுபவிக்கும் எங்கள் சமூகத்தினர் அதனை எதிர்கொள்ளும் வகையில் நாம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.
நமது அரசாங்கத்தின் கொள்கையானது, இங்கு உள்ள அகதிகளை மட்டுமல்ல, இடையிலுள்ள நாடுகளில் சிக்கியுள்ளவர்களையும் பாதிக்கிறது.
நான் தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாமில் பிறந்தேன். எனது பெற்றோர் இலங்கையில் இடம்பெற்ற மோசமான யுத்தத்தில் இருந்து தப்பி இந்தியாவில் 30 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.
அகதிகளுக்கு பிறந்த குழந்தை என கூறி இந்திய அரசு பாடசாலைகளில் எனக்கு கல்வி மறுக்கப்பட்டது, இந்தியாவில் வேலை மற்றும் நலன்புரி நலன்கள் உரிமை மறுக்கப்பட்டது.
நாங்கள் பாதுகாப்பு முகவர்கள் மூலம் பல தொல்லைகளுக்கு முகம் கொடுத்தோம். இந்தியாவில் பிறந்திருந்தாலும், முகாமை விட்டு வெளியேற விரும்பிய ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு நான் அறிக்கை செய்ய வேண்டியிருந்தது.
தமிழ்நாட்டு பொலிஸ் கிளை (சிறப்பு பிரிவுகள்) உறுப்பினர்களால் நாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பயத்தில் வாழ்ந்தோம்.
எங்கள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் எங்களை கூலி வேலை செய்ய வைத்தார்கள். இதன் விளைவாக பல ஆண்கள் மிகவும் இளம் வயதில் இறந்தார்கள். என் தந்தை 45 வயதில் இறந்தார்.
அதனால்தான் பல தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறவில்லை. அவுஸ்திரேலியா அகதிகளை மோசமாக நடத்துகிறது, எமது பிராந்தியத்தில் உள்ள மற்ற மாகாணங்கள் அகதிகளை மோசமாக நடத்துகின்றன.
எமது அரசாங்கத்தின் அகதிகள் கொள்கை நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களை கொன்றதாகவும் உள்ளது. இந்த உண்மையை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும், முகாம்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அகதிகள் வரவேற்க வேண்டும்.
என் குழந்தை பருவ நண்பர் லியோ சீமான்பிள்ளை 2014ஆம் ஆண்டு Geelong பகுதியில் உயிரிழந்து விட்டதனால் நான் அவுஸ்திரேலியாவின் அகதிக் கொள்கையை முதலில் தொடர்பு கொண்டேன்.
பின்னர் ஆராய்ந்த போது லியோவின் மரணத்திற்கு நாடு கடத்தப்பட்ட அச்சுறுத்தல்களே வழிவகுத்ததாக தெரியவந்துள்ளது.
தொடர்ச்சியான அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் இலங்கைக்கு தமிழர்களை நாடு கடத்திக் கொண்டிருக்கின்றன. அது இப்போதும் குடியேற்றத்துறை அமைச்சர் பீட்டர் டட்டனின் ஆட்சியின் கீழ் தொடர்கிறது.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் 1300 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு விசாக்களை மறுத்து வருகின்றனர் மற்றும் வரவிருக்கும் மாதங்களில் நாடு கடத்தப்படுவார்கள்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதிகாலை 5 மணியளவில் தமிழ் குடும்பம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதனை நாம் அவதானித்தோம்.
அந்த குடும்பத்திற்காக போராடி நாம் அவர்களின் நாடு கடத்தலை தடுத்தோம். தொடர்ந்து அவர்களுக்காக போராடுவோம் என லாவன்யா தவராஜா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.