ரபேல் நடால் பெல்ஜியத்தின் டேவிட்கோபினை வென்று இறுதிப்போட்டிக்கு!

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபேல் நடால் பெல்ஜியத்தின் டேவிட்கோபினை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் நடப்பு சம்பியனும், ‘முதல்நிலை’ வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-0 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் டேவிட்கோபினை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். களிமண் தரை போட்டியில் நடால் தொடர்ச்சியாக 44 செட்டுகளை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அரைஇறுதியில் கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்தாவுக்கு அதிர்ச்சி அளித்ததோடு இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தார். கிரீஸ் வீரர் ஒருவர் ஏ.டி.பி. தொடர் ஒன்றில் இறுதி சுற்றை எட்டுவது 1973-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். தரவரிசையில் 63-வது இடம் வகிக்கும் 19 வயதான சிட்சிபாஸ் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில், 10 முறை சம்பியனான நடாலுடன் மோதுகிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.