பிரான்சில் குடியுரிமை பெற்ற பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரான்சில் கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 120,000 நபர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


குறித்த பட்டியலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குடியுரிமை பெறும் பிரித்தானியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் ஒரு மில்லியன் நபர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலானோர் இத்தாலிய நாட்டின் குடிமக்களாக பதிவாகியுள்ளனர். இதன் அடுத்த இடத்தில் ஸ்பெயின் மட்டும் பிரித்தானியா உள்ளது.

பிரான்சில் புதிதாக சுமார் 119,152 பேருக்கு குடியுரிமை வழங்கி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மட்டுமின்றி தொடர்ந்து 4-வது முறையாக பிரான்ஸ் நாடு தனது குடிமக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

120,000 நபர்களுக்கு குடியுரிமை வழங்கியதில் சுமார் 21,000 பேர் பிரான்ஸ் மக்களை திருமணம் செய்து கொண்டு குடிமக்களாகியுள்ளனர்.

ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றிய கடவுச்சீட்டை கைவசம் வைத்திருந்த சுமார் 30 விழுக்காடு போர்த்துக்கல் மக்கள் பிரான்ஸ் குடிமக்களாக இணைந்துள்ளனர்.

ருமானியர்கள்(20%), போலந்து(9%), இத்தாலி(8%) மற்றும் பிரித்தானியர்கள்(6%) என தெரிய வந்துள்ளது.

பிரான்சில் குடியுரிமை பெற்ற பெரும்பாலான மக்களில் மொராக்கியர்கள்(17,728), அல்ஜீரியர்கள்(17,644), துனிசியர்கள்(7,673) என தெரிய வந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்சில் குடியுரிமை பெற்ற பிரித்தானியர்களின் எண்ணிக்கை 439. இது 2015 ஆம் ஆண்டு 320 என இருந்தது.

ஆனால் 2017 ஆம் ஆண்டு இது சுமார் 1,500 என அதிகரித்துள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.