கத்துவா சிறுமி வழக்கை விசாரிக்கும் வக்கீலுக்கு கொலை மிரட்டல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த இரு மந்திரிகள் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே, அந்த பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. மந்திரிகள் சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக காஷ்மீர் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி தெரிவித்தார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதி சிறுமியின் கொலை வழக்கை விசாரிக்கும் பெண் வக்கீல் தீபிகா சிங் ராஜவத், தான் கொலை செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த வழக்கை விசாரிக்கும் நான் தனிமைப்படுத்தப் படுகிறேன். நான் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம். கொலையும் செய்யப்படலாம். நீதிமன்றத்தில் பயிற்சி செய்ய என்னை அனுமதிப்பதில்லை. இதுகுறித்து சுப்ரிம் கோர்ட்டில் முறையீடு செய்யப் போகிறேன். நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.