பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த இருவர் கைது!

மீகொட மற்றும் மினுவாங்கொடை பகுதிகளில் பாதாள உலகக் கோஷ்டியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான சமயங் என்பவரின் உதவியாளர் ஒருவரை நேற்று மாலை மீகொட பகுதியில் கைது செய்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் மினுவாங்கொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணையை மீகொட மற்றும் மினுவாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வருடம் மார்ச் மாதம் 11 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.