சுதந்திர கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் ஒன்று அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு   ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 25 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் வருகை தந்திருந்ததாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

அதன்படி இந்தக் கூட்டத்தின் போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறினார்

Powered by Blogger.