தென்மராட்சி மீனவர்களுக்கு வலைகள் கிடைப்பதில் தாமதம்!

பயனாளிகளுக்குரிய வலைகள் இதுவரை வழங்கப்படாமல் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்று தென்மராட்சி கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் மீன்­பிடி வலை­கள் பெறு­வ­தற்­கா­கத் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் ஒரு தொகு­தி­யி­ன­ருக்­கான மீன்­பிடி வலை­கள் கடந்த மாதம் 9ஆம் திகதி பிர­தேச செய­ல­கத்­துக்கு கொண்டு வரப்­பட்­டன.
அவை அடுத்த வாரம் பயா­ன­ளி­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­ப­டு­மெ­னத் தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும் ஒரு மாத­கா­ல­மா­கி­யும் இன்­ன­மும் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த வரு­டம் தெரிவு செய்­யப்­பட்ட 75 பேருக்­கான வலை­களே நிலு­வை­யில் உள்­ளன.
இது தொடர்­பில் சாவ­கச்­சேரி பிர­தேச செய­லர் தேவ­ரஞ்­சனி பாபு­வி­டம் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, ஒரு தொகுதி வலை­களே பிர­தேச செய­ல­கத்­தில் உள்­ளன. ஏனை­ய­தொ­குதி வலை­கள் இன்­னும்­வர இருக்­கின்­றன. வட­க­டல் உற்­பத்தி நிறு­வ­னமே வலை­க­ளைத் தயா­ரித்து வழங்­கு­கின்­றது.
அவற்றை வழங்­கு­வ­தில் கால தாம­தம் ஏற்­பட்­டுள்­ள­மை­யா­லேயே அவற்றை வழங்க முடி­ய­வில்லை. எனி­னும் வலை­கள் இன்­னும் 2 கிழ­மை­க­ளில் பிர­தேச செய­ல­கத்­துக்கு வரும். வந்­த­தும் பய­னா­ளி­க­ளுக்கு வழங்­கப்­ப­டும்’ என்று தெரி­வித்­தார்.
இது தொடர்­பில் வட­க­டல் உற்­பத்தி நிறு­வ­னத்­து­டன் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, ‘சாவ­கச்­சேரி பிர­தேச செயலகத்துக்குரிய ஒரு தொகுதி பெரிய கண்­வ­லை­களை நாம் தயா­ரித்து கொடுத்து விட்­டோம். கிட்­டத்­தட்ட 900 சின்­ன­கண்­வ­லை­களே வழங்­க ­வேண்­டும். சின்ன கண்­வ­லை­கள் தயா­ரிப்­ப­தற்கு கால தாம­த­மா­கும் என்ற கார­ணத்­தி­னா­லேயே ஒரு தொகுதி வலை­கள் வழங்­கப்­ப­டா­மல் இருக்­கின்­றன. இரண்டு கிழ­மை­க­ளில் இவற்றை தயா­ரித்து சாவ­கச்­சேரி பிர­தேச செயலகத்துக்கு அனுப்­ப­வுள்­ளோம் என்று வட­க­டல் உற்­பத்தி நிறு­ வ­னத்­தின் முகா­மை­யா­ளர் நேச­ராஜா பிர­தீப் தெரி­வித்­தார்.
எமது நிறு­வ­னத்­துக்கு மூலப்­பொ­ருள்­கள் இப்­போது ஏரா­ள­மாக கிடைத்­துள்­ளன. அத­னால் எமது உற்­பத்­தியை கூட்­டக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. அத­னை­விட எமக்கு அரச ஒப்­பந்­தங்­க­ளும் ஏரா­ள­மாக வரு­கின்­றன. தற்­போது தமது நிறு­வ­னத்­தில் 65 தொழி­லா­ளர்­கள் வேலை செய்­கின்­ற­னர் என்று தெரி­வித்­தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.