நாம் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பதா? இல்லையா?

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். நாம் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பதா? அல்லது இல்லையா? என்ற இறுதி முடிவை ஜனாதிபதியே முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்தில் பிரதமர் தலையிட முடியாது என பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு சார்பாக வாக்களித்தவர்கள் சார்பில் அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்ெகாடி மற்றும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் நேற்று உறுதியாகத் தெரிவித்தனர்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
"பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதையிட்டு ஜனாதிபதி மிகவும் சந்தோஷப்பட்டார். பிரதமர் ஏற்கனவே இராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சுதந்திரக் கட்சி இருந்ததனால் இப்பிரேரணை பலம் பொருந்தியதொரு ஆயுதமாகவே இருந்தது.
நாம் அனைவரும் பிரதமரை எதிர்த்து வாக்களிக்கப்போவதாக கூறியதற்கு ஜனாதிபதி எந்தவொரு எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை. அவர் வேண்டுமானால் எம்மை அப்போதே அங்கிருந்து களைத்திருக்காலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை." எனறும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா நேற்று விளக்கமளித்தார்.
"ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து வாக்களிப்பன்று காலை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டில் அனைவரும் ஒன்றுகூடி இறுதி தீர்மானம் எடுப்பதாகவே முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாம் அனைவரும் பிரதமரை எதிர்த்து பிரேரணைக்கு சார்பாக வாக்களிப்பதாக ஏகமனதாக முடிவு செய்தோம். அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த சந்திப்புக்கு வரவேயில்லை.
அதற்கான காரணம் எமக்குத் தெரியாது. அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சாவும் கூட்டத்துக்கு வரமுடியாவிட்டாலும் இறுதி தீர்மானத்தை பின்பற்றுவதாக அறியத்தந்திருந்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை." என்றும் அவர் சுட்டிக்காட்டினார்."நாம் தொடர்ந்து அரசாங்கத்தில் இருந்தாலும் ஐ.தே.க நினைத்த மாதிரி எம்மை ஆட்டுவிக்க முடியாது. அப்படியே அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் நாம் வேறு கட்சிகளுடன் இணையாமல் நாடு முழுவதும் ஐ.தே.கவை பலப்படுத்தும் வேலைத் திட்டத்தையே முன்னெடுப்போம் என்றும் அவர்கள் கூறினர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஐக்கிய தேசிய கட்சியினர் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளனராம். இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக்கூட இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.