உலகில் மிகவும் மதிக்கப்படும் நபர்களின் பட்டியல் வெளியானது!

உலகில் மிகவும் மதிக்கப்படும் நபர்களின் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.


குறித்த பட்டியலில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா இரண்டாவது இடத்திலும், தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 17-வது இடத்திலும் உள்ளனர்.

கால்பந்து உச்ச நட்சத்திரங்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவரும் முறையே 10 மற்றும் 11-வது இடத்தில் உள்ளனர்.

பிரித்தானியர்களால் அதிகம் மதிக்கப்படும் நபர்களாக ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் டேவிட் அட்டன்பரோ ஆகியோர் உள்ளனர்.
மட்டுமின்றி பிரித்தானிய அரச குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் இளவரசர் ஹரி 4-வது இடத்திலும், இளவரசர் வில்லியம் 7-வது இடத்திலும் இளவரசர் பிலிப் 9-வது இடத்திலும் உள்ளனர்.



கடந்த மாதம் காலமான பிரித்தானிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் 3-வது இடத்தில் உள்ளார். கத்தோலிக்க மத தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் 16-வது இடத்தில் உள்ளார்.

இதேபோன்று உலகில் மதிக்கப்படும் பெண்களின் பட்டியலில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு அடுத்து 2-வது இடத்தில் மிட்சல் ஒபாமா உள்ளார்.
4-வது இடத்தில் பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத், 5-வது இடத்தில் ஹில்லரி கிளிண்டன் உள்ளார். 15-வது இடத்தில் பிரித்தானிய பிரதமர் தெரெசா மே உள்ளார்.

உலகமெங்கும் மொத்தம் 35 நாடுகளில் உள்ள 37,000 மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் குறித்த பட்டியலை YouGov நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகில் மதிக்கப்படும் ஆண்கள்:

1பில் கேட்ஸ்
2பாரக் ஒபாமா
3ஜாக்கி சான்
4ஜி ஜிங்பிங்
5ஜாக் மா
6விளாட்மிர் புடின்
7தலாய் லாமா
8நரேந்திர மோடி
9அமிதாப் பச்சன்
10கிறிஸ்டியானோ ரொனால்டோ


உலகில் மதிக்கப்படும் பெண்கள்:

1ஏஞ்சலினா ஜோலி
2மிட்சல் ஒபாமா
3ஒபரா வின்ப்ரே
4இரண்டாம் எலிசபெத்
5ஹில்லரி கிளின்டன்
6எம்மா வாட்ஸன்
7மலாலா யூசப்சையி
8ஏஞ்சலா மெர்க்கெல்
9டெய்லர் ஸ்விஃப்ட்
10மடோனா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.