முல்லைத்தீவுக் கடலில் ஏற்படும் திடீர் மாற்றம்!

முல்லைத்தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கக் குழு ஒன்று முல்லைத்தீவுக்கு வருகை தந்துள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருந்து முல்லைத்தீவு கடல் தன்மையில் மாற்றம் உள்ளதாகவும், நீர் மட்டம் 5 அடி அதிகரித்ததாகவும், பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல முறை கடல் கொந்தளித்து கடல் நீர் நிறம் வித்தியாசமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கடல் நிலமை தொடர்பில் அனைவருக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் பிரிவு பிரிவு குழுவினர், கொழும்பில் உள்ள சில குழுக்கள் இது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டனர். எனினும் அவர்களால் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அமெரிக்காவின் சுற்றுலா சூழல் மற்றும் புவியியல் மாற்றம் தொடர்பான ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் சிலர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அழைப்பிற்கமைய முல்லைத்தீவுக்கு வருகைத் தந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க ஆய்வு குழுவினர் முல்லைத்தீவுக் கடல் எல்லைக்கு சென்று ஆரம்ப ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.