கொழும்பு, கம்பஹா, குருனாகல் டெங்கு அபாயம்!

கொழும்பு, கம்பஹா மற்றும் குருனாகல் மாவட்டங்களில் தொடர்ந்தும் டெங்கு அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் ஏனைய மாவட்டங்களில் டெங்கு அபாயம் இல்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 15,534 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2,000 இற்கும் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.