பன்­னா­டு­க­ளின் ஆத­ர­வு­டன் எமது விடு­த­லைக்­கான தீர்­மா­னங்­களை எடுக்க வேண்­டி­யுள்­ளது!

எமது இனம் இழந்த சுதந்­தி­ரத் தை­யும், உரி­மை­க­ளை­யும் மீளப் பன்­னா­டு­க­ளின் ஆத­ர­வு­டன் பெறு­வ­தற்­கான சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ள­தால் அனைத்­துக் கட்­சி­கள் மற்­றும் பொது அமைப்­புக்­கள் ஒன்­றி­ணைய வேண்­டும்.
இவ்­வாறு தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சோ. சேனா­தி­ராசா அழைப்பு விடுத்­துள்­ளார். தந்தை செல்­வா­வின் 121 ஆவது பிறந்­த­தி­னம் யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள அவ­ரது நினை­வி­டத்­தில் நேற்று நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்ட பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது-,
ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை அரசு வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாத கார­ணத்­தால் அவர்­க­ளுக்­குக் கடும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. பன்­னாட்டு பொறி­மு­றைக்­குள் இலங்கை அரசு சிக்க வேண்­டிய சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. தென்­னி­லங்­கை­யில் குழப்­ப­நி­லை­யும் ஏற்­பட்­டுள்­ளது. நாம் பன்­னா­டு­க­ளின் ஆத­ர­வு­டன் எமது விடு­த­லைக்­கான தீர்­மா­னங்­களை எடுக்க வேண்­டி­யுள்­ளது.
அதற்­காக நாம் ஒன்­று­பட்டு உழைக்க வேண்­டிய சூழ்­நிலை தோன்­றி­யுள்­ளது. அதற்­காக அனைத்­துக் கட்­சி­கள் மற்­றும் சமூக அமைப்­புக்­களை ஒன்­றி­ணை­யக் கோரு­கின்­றேன். தமிழ்,முஸ்­லிம் மக்­கள் வாழ்­கின்ற பிர­தே­சங்­க­ளின் விடி­வுக்­காக நாம் முயற்­சிக்க வேண்­டும்.
அடக்கி ஒடுக்­கப்­பட்ட சமூ­கம் இந்த மண்­ணில் தலை நிமிர்ந்து நிற்க வேண்­டும். பேரி­ன­வா­தச் சக்­தி­க­ளி­டம் இருந்து எம்மை மீட்க நாம் இழந்த சுதந்­தி­ரத்தை மீளப் பெற முக்­கிய தீர்­மா­னங்­களை எடுக்க வேண்­டும்.
எமது இனத்­தின் விடு­த­லைக்­கா­க­வும், இழந்த சுதந்­தி­ரத்தை பன்­னா­டு­க­ளின் ஆத­ர­வு­டன் மீண்­டும் பெறு­வ­தற்­கான சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. நாம் அனை­வ­ரும் இப்­போது ஒன்­று­பட வேண்­டும் என்று தந்தை செல்­வா­வின் நினை­வி­டத்­தில் இருந்து அழைப்பு விடுக்­கின்­றேன். என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.