மகிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாளை விசேட சந்திப்பு!

ஒன்றிணைந்த எதிர்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.

 கொழும்பு - விஜயராம பகுதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

 நாட்டின் தற்போதைய அரசியல் நிலமைகள் மற்றும் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.

 அத்துடன், எதிர்வரும் மே தினம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்   தெரிவித்தார்.

 இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாக சீரமைப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை குழு நாளைய தினம் மீண்டும் கூடவுள்ளது.

 இந்த சந்திப்பில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள மத்திய செயற்குழுவில் முன்வைக்கப்படும் என பிரதி அமைச்சர் ஜே.சி.அலவத்துவல குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.