வறட்சியால் வடமேல் மாகாணத்தில் மக்கள் பாதிப்பு!

வறட்சியின் காரணமாக வடமேல் மாகாணத்தில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அங்கு மொத்தமாக 1 லட்சத்து 3ஆயிரத்து 776 குடும்பங்களைச் சேர்ந்த, 3 லட்சத்து 36 ஆயிரத்து 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

 குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் 2 லட்சத்து 16ஆயிரத்து 752 பேரும், குருனாகல் மாவட்டத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 539 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதேநேரம், வட மாகாணத்தில் வறட்சி காரணமாக, 43 ஆயிரத்து 259 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வடக்கில் மன்னார் மாவட்டத்திலேயே அதிக வறட்சி பாதிப்பு பதிவாகியுள்ளது.

 மன்னார் மாவட்டத்தில் 1லட்சத்து ஆயிரத்து 983 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், கிளிநொச்சி மாவட்டத்தில் 33 ஆயிரத்து 624 பேரும், முல்லைத்தீவில் 10 ஆயிரத்து 5 பேரும், வவுனியாவில் 4ஆயிரத்து 563 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 நாடெங்கிலும் மொத்தமாக வறட்சி மற்றும் கடும் காற்றின் காரணமாக, 5 லட்சத்து 7ஆயிரத்து 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இரண்டு பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.