பால் மா விலைக்கு அரசாங்கம் அறவிடும் வரியை குறைக்குமாறு கோரிக்கை!

பால் மா விலையை அதிகரிக்க அரசாங்கம் இடமளிக்காது போனால், அரசாங்கம் அறவிடும் வரியையாவது குறைக்குமாறு பால் மா இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இவ்வாறு இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதாக பிரதமருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து பிரதமர் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 உலக சந்தையில் பால் மா விலை உயர் உயர்வடைந்துள்ளமை மற்றும் உள்நாட்டு பால்மா விலை உயர்வுக்கு அரசாங்கம் இடமளிக்காமை போன்ற காரணங்களினால் பால் மா இறக்குமதி செய்வதை பால்மா இறக்குமதி நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.

 உலக சந்தையில் பால் மா மெட்ரிக் டொன் ஒன்றின் விலை தற்பொழுது 3500 அமெரிக்க டொலர் முதல் 3600 அமெரிக்க டொலர்கள் வரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 எது எவ்வாறிருப்பினும், சந்தையில் தற்பொழுது பால் மா தட்டுப்பாடு இல்லையென கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.