விரைவாக மீளக்குடியேற உதவி!

யாழ்ப்­பாணம் வலி. வடக்கில் விடு­விக்­கப்­பட்ட பகு­தி­களில் மக்கள் விரை­வாக மீளக் குடி­யேறும் வகையில் வலி. வடக்கு பிர­தேச சபை­யா­னது மக்­க­ளுக்கு பல்­வேறு உத­வி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது  என்று   வலி. வடக்கு பிர­தேச சபையின் தவி­சாளர் சுகிர்தன் தெரி­வித்தார்.  
வலி. வடக்கு பிர­தேச சபை­யினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் வேலைத்­திட்­டங்கள் தொடர்­பாக அவர்  மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,
கடந்த  சித்­திரை 13ஆம் திகதி வலிகாமம் வடக்கில் பொதுமக்­க­ளது காணி­களில் 683 ஏக்கர் காணிகள்  இரா­ணு­வத்­திடம் இருந்து பொதுமக்­க­ளுக்கு மீள கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன.  இவற்றில் மக்கள் மீள குடி­யேற்­றத்தை விரை­வாக மேற்­கொள்ள தேவை­யான நட­வ­டிக்­கை­களை நாம் மேற்­கொண்டு வரு­கின்றோம்.
குறிப்­பாக விடு­விக்­கப்­பட்ட காணி­களில் உள்ள கிண­று­க­ளா­னது பாழ­டைந்து தூர்ந்து போயுள்ள நிலையில் அவற்றை துப்புரவு செய்வதற்கான  நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
இவை தவிர மக்கள் காணி­க­ளுக்கு செல்­வ­தற்கு இடை­யூ­றாக பாதை­களில் பற்­றை­களும் காட்டு மரங்­களும் அடர்த்­தி­யாக வளர்ந்­துள்­ளன. எனவே அம் மரங்­களை இயந்­தி­ரங்­களைக் கொண்டு வெட்டி பாதை­களை அடை­யா­ளப்­ப­டுத்தும் வேலை­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.
 வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பைக்கு சொந்­த­மான கட்­டுவன் –மயி­லிட்டி பிர­தான வீதி­யா­னது சேத­ம­டைந்­துள்ள நிலையில் அவ் வீதியினையும் விரைவாக சீர்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.