தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2018 மெல்பேர்ண் நிகழ்வு!

சுடர் விட்டுப் பிரகாசித்த எமது தாய்நிலம், புதிய நூற்றாண்டின் கொடிய
இனவழிப்பின் சாட்சியாய், அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்து ஓன்பதாண்டுகள் உருண்டோடிவிட்டன.

விடுதலைக்காய்ப் போராடிய போராளிகளும், தேசத்தின் மக்களாய் எம்மண்ணோடு வாழ்ந்த எமது உறவுகளுமென, நிறைந்த எமது தாயகம் இனவாதப்படைகளின் கொடிய போராயுதங்களின், மனிதாபிமானமற்ற போரில் சிதறடிக்கப்பட்டது.

இலங்கைத்தீவில், தமிழினத்தின் இருப்பை அழிப்பதிலேயே, காலங்காலமாய்க் குறியாயிருந்த சிங்கள தேசத்தின் படைகள், முள்ளிவாய்க்காலில் அதன் உச்சக்கட்ட இனவழிப்பை நிகழ்த்தியது. எனினும் மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையுடன், இக்கொடிய போரில் இழந்துபோன எம்முறவுகளை நினைவில் ஏந்தி, உலகப் பரப்பெங்கும் தமிழர் வாழும் தேசங்களில் மேமாதம் 18ம் நாளை ‘தமிழர் இனவழிப்பு நினைவுநாள்’ என்று நினைவு கூரப்படுகின்றது.

அவ்வகையில், அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில், ‘தமிழர் இனவழிப்பு நினைவுநாள்’ நிகழ்வு, எதிர்வரும் மே 18ம் நாள் வெள்ளிக்கிழமைநடைபெற ஏற்பாடாகியுள்ளது. எம்மினம் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பை நினைவுகூரும் இந்நிகழ்வில், தமிழர்கள் அனைவரும் அணிதிரண்டு பங்கேற்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

இடம் (Venue): St Jude Parish Hall, 51 George St, Scoresby, Vic 3179.
காலம் (Time): 18/05/2018 வெள்ளிக்கிழமை, மாலை 6.30P.M – 8.30P.M
மேலதிக தொடர்புகளுக்கு (Contact): 0433 002 619 or 0404 802 104

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.