யேர்மனி, ராட்டிங்கனில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வணக்கநிகழ்வு!

தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும்
தூண்களாகவும்,தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாக திகழ்ந்துபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவுகள் சுமந்தவணக்கநிகழ்வானது 20.05.2018 சனிக்கிழமை அன்று ராட்டிங்கன் நகரத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது.
இவ்வணக்கநிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடிஏற்றிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டுஅகவணக்கத்துடன் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர்,மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில்  எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.

நடுகல் நாயகர்களாக தங்களை விதையாக்கிய பெருந் தளபதிகளையும்,மாவீரப் போராளிகளையும் நினைவுகூரும் இவ் வணக்கநிகழ்வின் எழுச்சிநிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், சிறுவர்களின் இன உணர்வுமிக்க பேச்சுக்கள், கவிதைகள்;,காலத்திற்கேற்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.