ஓமந்தை பகுதியில் 69 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

வவுனியா - ஓமந்தை பகுதியில் வியாபார நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக எடுத்துவரப்பட்ட பெருமளவு கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

இன்று (06) அதிகாலை ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வியாபார நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக பெருமளவு கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதன் அடிப்படையில் வன்னிப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சேதபந்து தென்னக்கோனின் வழிநடத்தலில் பொலிஸ் குழுவினர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 69 கிலோ 725 கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர். 

அவ்வீட்டிலிருந்த வவுனியா திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த சி. துசாந்தன் (வயது 23) என்பவரும், மல்லாவியை சேர்த்த க.சபேசன் (23வயது) , யாழ். தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த ஆர். ரஜீபன் (28 வயது) ஆகிய மூவரைக் கைது செய்துள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவினையும் சந்தேக நபர்களையும் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.