தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடல்!

தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வனஜீவராசிகள் காப்பாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகமுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லையெனின் தமது தொழிற்சங்க நடவடிககையை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக வனஜீவராசிகள் காப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனால் கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் வனஜீவராசிகள் காப்பாளர்கள் சங்கம் தமது மேலதிக கொடுப்பனவு தொடர்பான காரணங்களை முன்வைத்து தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

தொழிற்சங்க நடவடிக்கையினால் காட்டு யானைகளை விரட்டுதல் மருந்திடல் போன்ற செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.

வேறு அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டு தொடர்ந்து அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.