எல்லை கிராமமும் கண் துடைப்பு பார்வையும்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங் களை நேரில்
பார்வையிட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் குறித்த சிங்கள குடியேற்றங்களை தடுத் து நிறுத்தவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பியிருக்கும் எல்லை கிராமங் களை சேர்ந்த மக்கள், வெறுமனே பார்த்ததுடன் எல்லாம் முடிந்து விட்டதா? எனவும் கேட்டுள்ளார்கள்.
'மாயபுர' என்ற பெயரில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்கள் பலவற்றை அபகரித்து பாரி ய சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக வ டமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மாகாணசபையின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இதi ன தொடர்ந்து எல்லை கிராமங்களில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நேரடி
யாக பார்க்கவேண்டும். என மாகாணசபை உறுப்பினர்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக மா காணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் சுமார் 22 வரையான மாகாணசபை உறுப் பின்னர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களுக்கு கடந்த மாதம் 10ம் திகதி நேரில் சென் று நிலமைகளை ஆராய்ந்திருந்தனர். இதனை தொடர்ந்து வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 
சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேசி தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்ப ட்டிருந்த நிலையில், மாகாணசபை உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. பின்னர் அந்த சந்திப்பு தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திகை;கப் பட்டு இதுவரை நடைபெறாத நிலையிலேயே மக்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்
இது தொடர்பாக மக்கள்  மேலும் கூறுகையில், எங்களுடைய நிலங்களை அபகரித்து திட்டமிட்ட சிங்க ள குடியேற்றங்கள் சிறிதளவும் வேகம் குறையாமல் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் தி ட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கூறி பெருமெடுப்பில் எல்i ல கிராமங்களுக்கு வந்த வடமாகாணசபை ஒரு மாதம் கடந்துள்ளபோதும் ஆக்கபூர்வமான 
நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. எல்லை கிராமங்களை வடமாகாணசபை உறுப்பினர்கள் பார்வையிட்ட துடன் எல்லாம் முடிந்து விட்டதா? எனவே இந்த விடயத்தில் பொறுப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக் கை எடுக்கவேண்டும் என மக்கள் கேட்டுள்ளனர். இதேவேளை மக்களுடைய இந்த கருத்து தொடர் பாக முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனிடம்
தொடர்பு கொண்டு கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்கு மிடையில் நடைபெறவிருந்த சந்திப்பு மிகவும் தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் பிற்போடப்பட்டது. மிக விரைவில் அந்த சந்திப்பு நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்படும் என தாம் நம்புவதாகவும், எல்லை கிராமங்களில் தமிழ் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு நிரந்தரமாக வாழும்
வகையில் சில வசதிகளை செய்து கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய ரவி கரன், கொக்குத்தொடுவாய் அ.த.க பாடசாலை வன் சீ பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு அங்கே உய ர்தர வகுப்புக்கள் சில தினங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எல்லை கிராமங்களில் உள்ள விவசாய வீதிகளை புனரமைக்க முதலமைச்சரிடம் தாம் கோரிக்கை கடிதம் அனுப்பவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.