இறால் வளர்ப்பை கிழக்கில் ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்!

கிழக்கு மாகாணத்தில் நன்னீர் இறால் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள அடையாளங்காணப்பட்ட நன்னீர் நிலைகளில் இறால் வளர்ப்பை அதிகரிப்பதற்காக சுமார் 300 இலட்சம் ரூபாவை செலவிட உள்ளதாக அமைச்சின் கிழக்கு மாகாண பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.