கோறளைப்பற்று பிரதேசசபை கு.குணசேகரன் கன்னியுரை!

தமிழுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் தம் உயிரை துச்சமென மதித்து தன் உயிரினை ஈத்த என் உயிருக்கும் மேலான மாவீரர் தமிழ்ச் செல்வங்களுக்கு எனது இரு கரங்களையும் கூப்பி வணங்குகின்றேன்.


கௌரவ தவிசாளர் அவர்களுக்கும் சக உறுப்பினர்களுக்கும் பிரதேசசபை செயலாளர் அவர்களுக்கும் பிரதேசசபை ஊழியர்களுக்கும் எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். நீண்ட இடைவேளைக்குப்பின் கிராம மட்டங்களிலும் நகர மட்டங்களிலும் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினருக்கான தேர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியூடாக போட்டியிட்டு பதினொராம் வட்டாரத்தில் வெற்றி ஈட்டினேன் .

மேலும் எமது கட்சியானது 2009 மே மாதம் 18 வரை தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களினால் இனப் பிரச்சினைக்கு தீர்வென பேச்சு வார்த்தை மேசையில் வலியுறுத்தப்பட்டு வந்த கொள்கைகளான வடகிழக்கு இணைந்த தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை தமிழ்த தேசியம் அதனுடைய இறைமை அங்கீகரிக்கப்பட்ட மக்களின் வேணாபாவை சுமந்து செல்லும் தூய்மையும் நேர்மையும் அர்ப்பணிப்பும் மிக்க அரசியல் இயக்கமான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பெரு மதிப்புக்குரிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வழி காட்டலில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தமையால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.



மேலும் எமது கோறளைப்பற்று பிரதேசசபை எல்லைக்குள் உற்பட்ட கிரான் சுற்று வட்டம் கும்புறுமூலை சுற்று வட்டம் செற்றடி சுற்று வட்டம் ஆகிய மூன்று சுற்று வட்டங்களுக்கும் தமிழர்கள் அடையாளங்கள் அழிந்து வருவதால் அதனை தமிழர்கள் மரபை நிலைநிறுத்துமாறு அன்னை பூபதி தியாக திலீபன் ஜோசப்பரராசசிங்கம் ஐயா இவர்களின் சிலைகளை சுற்று வட்டத்தில் தமிழர்களின் அடையாளமாக நிறுத்த வேணும் என்று தவிசாளரிடம் முன் வைத்தேன் .


மேலும் எமது கிராமங்களில் மணல் ஒழுங்கைகள் அதிகமாக காணப்படுகின்றது வீதி விளக்குகளும் எமது வட்டாரத்திற்கு தேவைப்படுகிறது என்று தவிசாளரிடம் கேட்டுக்கொண்டேன் மேலும் எமக்கு வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி கூறுகின்றேன். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.