டென்மார்க் தொழிலாளர்தின நிகழ்வு!!

“உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள் ”
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்

உலகத்தொழிலாளர் என்ற பெரும் சமூகத்தினுள், தமிழீழத்தின் பரந்துபட்ட உழைக்கும் மக்களும் அடங்குகிறார்கள். எம் தேசியத்தலைவரின் கருத்திற்கு அமைவாக டென்மார்க் தலைநகரில் பல்லின மக்களுடன் இணைந்து தமிழீழ மக்களும் தொழிலாளர் தினத்தை கொண்டாடினார்கள். இந் நாள் தொழிலாளர்களின் எழுச்சி நாளாகவும், சுதந்திர வாழ்வுரிமையை வென்றெடுப்பதற்கான நாளாகவும் விளங்குகின்றது.மிகவெழுச்சியோடு நடைபெற்ற இந்நிகழ்வில், ஈழத்தில் இனவழிப்பு நடந்;தேறி எட்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், தமிழ்மக்கள் நீதிமறுக்கப்பட்டு, நிலமீட்பு போராட்டம், மற்றும் காணாமல்போனோருக்கான நீதிபோராட்டம் என அன்றாடவாழ்வில் சொல்லொணா இன்னல்களுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள் என்கின்ற உண்மை நிலைவிளக்கம், பல்லின மக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.

உரிமை மறுக்கப்பட்டு கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் நடத்தப்படுவதை தடுத்து, தொழிலாளர்கள் தம் உரிமைகளை வென்று அடிமைநிலையை உடைத்தெறிந்ததை நினைவுகூரும் இந்நாளில், எம் தமிழ்குழாம் தன் அடிமைநிலை மாறி சுதந்திரக்காற்றை சுவாசிக்க, தாயகம் மற்று புலம்பெயர் வாழ் தமிழீழமக்கள் ஒன்றாய் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து முழுமூச்சொடு செயற்படவேண்டும்.

டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்
டென்மார்க்,

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.