பவர்பிளே ஓவரில் மெர்சல் காட்டிய சென்னை!

ஐபிஎல் 11வது சீசனின் இறுதி போட்டி மும்பை வான்கடே
மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை அணியும் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும் கோஸ்வாமியும் களமிறங்கினர். நிகிடி வீசிய இரண்டாவது ஓவரின் 5வது பந்தை கோஸ்வாமி அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓடினார். இரண்டாவது ரன் ஓடும்போது கோஸ்வாமி ரன் அவுட்டாகி வெளியேறினார்.
அதன்பிறகு தவானுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர். ஆனால் பவர்பிளேவில் ரன்ரேட் குறைவாகவே இருந்தது. 3 ஓவருக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து நிகிடி வீசிய 4வது ஓவரை வில்லியம்சன் எதிர்கொண்டார். அந்த ஓவரில் ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. 4வது ஓவர் மெய்டன் ஆனது.
4வது ஓவருக்கும் சேர்த்து 5வது ஓவரில் வில்லியம்சன் அடித்தார். சாஹர் வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். 5 ஓவருக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள். 6வது ஓவரில் ஒரு சிக்ஸர் உட்பட 12 ரன்கள். பவர்பிளே 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 42 ரன்கள் எடுத்தது.
8 ஓவருக்கு ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 62 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் வில்லியம்சன் ஜோடி நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடிவருகிறது.
 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.