தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்துவது யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு !

தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு சென்ற
வியாழக்கிழமை யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற  வெளிவிவகார அமைச்சுடனான சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்ப் பிரதிநிதிகளால் தமிழின அழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்துவது யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு என கூட்டாக வலியுறுத்தப்பட்டது. 

யேர்மன் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சில் சிறிலங்காவுக்கு பொறுப்பான தலைமை உயரதிகாரி மதிப்புக்குரிய திரு அல்மெர் அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் தமிழின அழிப்பு  மற்றும் இன்றும் தாயகத்தில் நடைபெறும் கட்டமைப்புசார் இனவழிப்பு,நிலப்பறிப்பு,காணாமல் போனவர்கள், திட்டமிட்ட  தமிழர் கலாச்சாரச்  சீரழிவு,போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அபிவிருத்தி, பொதுவாக்கெடுப்பு  பன்னாட்டு சுயாதீன விசாரணை , அனைத்துலக பங்கேற்பு   என பல விடையங்கள் குறித்து ஆழமாக  விவாதிக்கப்பட்டது. 

ஐநா மனிதவுரிமை பேரவையால் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 2019 ஆண்டு முடிவடையும் நேரத்தில் ஐநா மனிதவுரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் இன அழிப்புக்கு உள்ளாகி நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்களுக்கு நேர்மையான முறையில் முடிவு வழங்க வேண்டும் என்றும் இத் தருணத்தில் யேர்மன் அரசாங்கம் தமிழின அழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணையை முன்மொழிவது  யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு எனவும்  வலியுறுத்தப்பட்டது. சந்திப்பின் நிறைவில் தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை நிலைநாட்ட வலியுறுத்தும் மனு கையளிக்கப்பட்டதோடு , தமிழின அழிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் ஆவணங்களும் கையளிக்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.